sundar.c in Coffee With Kadhal movie audio and trailer date released

Advertisment

சுந்தர்.சி இயக்கத்தில் 'அவ்னி மூவிஸ்' சார்பாக குஷ்பூ தயாரிக்கும் படம் 'காஃபி வித் காதல்'. இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் கதாநாயகிகளாக மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'காஃபி வித் காதல்' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 26ஆம் தேதி இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதனை ஜீவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.