கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி. இவர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றி, திரைப்படங்களை இயக்க தொடங்கினார். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு.

Advertisment

sundar pichai

இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி, கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சைக்கு தமிழில் ட்விட்டர் மூலம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்

அதாவது, கூகுல் வழிகாட்டி தாய்மொழியில் திசையின் பெயர்களை சொன்னால் சுகமாய் இருக்கும்,இதை செய்ய முடிந்தால் பெருமையெல்லாம் உம்மைச்சேரும் என ட்வீட் செய்து சுந்தர் பிச்சையை அதில் டேக் செய்துள்ளார்.