Advertisment

"விஷாலுக்குப் பெண் வேடம் போட்டது போல இருந்தார்..." - நடிகையை கிண்டல் செய்த சுந்தர்.சி

விஷால் - சுந்தர்.சி கூட்டணியில், தமன்னா நாயகியாக நடித்துள்ள 'ஆக்‌ஷன்' படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படம் தொடர்பான விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர்.சி படத்தின் நாயகிகளில் ஒருவரான அக்கன்ஷாவை அறிமுகம் செய்து ஜாலியாகப் பேசியது...

Advertisment

sundar c

"ஒரு 'ஆக்‌ஷன்' படத்துல நடிக்க விஷாலுக்கு இணையா ஒரு நடிகை வேணும்னு தேடுனோம். அக்கன்ஷாவை ஒரு நிகழ்ச்சியில் பார்த்துதான் தேர்ந்தெடுத்தோம். சன் டி.வி. நிகழ்வு ஒன்றில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார். 'யாருடா இது, நாம தேடுற மாதிரியே இருக்காங்க' என்று யோசித்தேன். 'விநாயகர்' சீரியலில் பார்வதியாக நடிக்கிறார் என்றார்கள். 'அப்ப ஏற்கனவே ரோப் கட்டியெல்லாம் பழகியிருப்பாங்க. நமக்கு ஏற்ற நடிகை இவர்தான்' என்று முடிவு செய்தோம். விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா மாதிரிதான் இருப்பார். அப்படி இருந்தார் அவர். நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடுதான் போவார்கள். அவ்வளவு கடினமான சண்டைக்காட்சிகள், சூழ்நிலையில் படப்பிடிப்பை நடத்தினோம்" என்றார்.

Advertisment

vishal Action sundar c
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe