sundar c talk about veetla vishesham movie

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'பதாய் ஹோ'. இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் ஆர்.ஜே பாலாஜி வீட்ல விசேஷம்என்ற பெயரில் நடித்துள்ளார். இப்படத்தை என்.ஜே சரவணன் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன் இணைந்து Romeo Pictures தயாரித்து போனி கபூர் வழங்கும் இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்துஅண்மையில் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள்பி.வாசு, சுந்தர் சி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாககலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, "நான் அறிமுகப்படுத்திய பாலாஜி நடிகராகி இப்போது இயக்குநராக மாறியிருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. பாலாஜியிடம் நல்ல கிரியேட்டிவ் திறமை இருக்கிறது. நான் அவர் திறமையைதான் பயன்படுத்தினேன். அவர் இப்போது அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இந்தியை விட பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் உள்ளனர். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சிறப்பாக உள்ளது" என்றார்.

Advertisment