Advertisment

'காஃபி வித் காதல்'... சுந்தர் சி பகிர்ந்துகொண்ட சுவாரஸ்ய தகவல்

sundar c talk about coffee with kadhal

இயக்குநர் சுந்தர் சி, ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் 'காஃபி வித் காதல்' படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தைஅக்டோபர்7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குநர்சுந்தர் சி'காஃபி வித் காதல்'படம் குறித்து தகவலைகளை பகிர்ந்துள்ளார். அதில், "இந்த படத்தோட தலைப்பு ரொம்ப கஷ்டப்பட்டேன். ஏன்னாஇந்த படத்தில் லவ் இருக்கு ஆனால் முழுவதும் ரொமான்டிக் கிடையாது. காமெடி இருக்கு, ஆனால் முழுவதும் காமெடி படம் கிடையாது. செண்டிமெண்ட் இருக்கு ஆனால் முழுவதும் செண்டிமெண்ட் படம் கிடையாது. இது எல்லாத்தையும் கலந்த ஒரு படம். 20 வருடமாக நான் ஆசைப்பட்டு எடுக்கணும்நினைச்சி படம்தான்'காஃபி வித் காதல்'. மூன்று அண்ணன், தம்பிகளுக்கு இடையே நடிக்கும் சண்டை, பாசம், உள்ளிட்ட உணர்வுகளை அப்படியே இந்த படத்தில் காட்டியுள்ளேன். நான் ரொம்ப ரசித்து ரசித்து எடுத்த படம். 2 மணிநேரம்தியேட்டரில் வந்து உட்காருபவர்களுக்குநல்ல படம் பார்த்த உணர்வைஇந்த படம்கொடுக்கும்" என்றார்.

Advertisment

மேலும் யுவன் சங்கர் ராஜா கூறுகையில், "சுந்தர் சி சார் இதுவரை எடுத்த படத்திலேயே இது வித்தியாசமான படமாக இருக்கும். இப்படத்தில் 8 பாடல்கள் இருக்கு. அதுஅனைத்தும் நல்லா வந்திருக்கு.எனக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்" எனத்தெரிவித்துள்ளார்.

Coffee With Kaadhal movie sundar c
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe