/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/94bfea84-7129-469c-905d-82a30ed98efe.jpg)
24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dc6479c6-a830-418c-9e8c-d1cd0b99826f.jpg)
விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)