Skip to main content

''என்னை காமெடி இயக்குநர்னு முத்திரை குத்திட்டாங்க. அதனால இதை செய்கிறேன்'' - சுந்தர். சி ஆதங்கம்!

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படமாக உருவாகும் இப்படம் குறித்து இயக்குநர் சுந்தர்.சி பேசியபோது....

 

vishal

 

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். பிறகு “ஆக்‌ஷன்” படம் மூலம் மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகன் 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. படப்பிடிப்புகள் எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும், மீதமுள்ளவை ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில்   படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. 

 

தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை. நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடி படம் செய்யும் இயக்குநராக்கி விட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது. 

 

 


இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே  பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை ஹிந்தி ரசிகர்களும், தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு  வைத்துள்ளோம். இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

 

இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம். இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்‌ஷன் டீமோடு கைகோர்க்கும் விஷால்!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது. அதற்குப் பிறகு விஷால்- மிஷ்கின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மிஷ்கின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்னர் அந்த படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார்.

 

vxv

 

 

இதையடுத்து விஷால் எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் ‘சக்ரா’ படத்திலும்  நடித்துவருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஷால் அடுத்து நான்காவதாக இயக்குனர் சுந்தர்.சியுடன் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மதகஜராஜா, ஆம்பள, ஆக்‌ஷன் ஆகிய மூன்று படங்கள் உருவாயின. இதில் ‘மதகஜராஜா’ படம் தவிர்த்து மற்ற இரண்டு படங்கள் திரைக்கு வந்து ஆம்பள படம் ஓரளவு வெற்றிபெற்று, ஆக்‌ஷன் படம் தோல்வியை தழுவியது. சுந்தர் சி தற்போது அரண்மனை 3ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு விஷாலை வைத்து அடுத்த படவேலைகளை விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Next Story

"ஹிப் ஹாப் தமிழா என்னிடமிருந்து படத்தை பிடுங்கிக்கொண்டார்" - சுந்தர்.சி

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

விஷால் - சுந்தர்.சி கூட்டணியில், தமன்னா நாயகியாக நடித்துள்ள 'ஆக்‌ஷன்' படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படம் தொடர்பான விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி குறித்துப் பேசியது...  

 

csC

 

"நான் தொடர்ந்து ஆதி கூட படங்கள் பண்ணிட்டேன். என் படத்துக்கு அவர் இசையமைச்சுட்டார், அவர் இயக்கிய படங்கள் இரண்டை நான் தயாரிச்சுட்டேன். ஆனா, இந்தப் படத்துக்கு இசையமைக்க ஆதியை கூப்பிடக்கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா, 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' படங்களை தயாரிச்சேன், அந்தப் படங்கள் வெற்றியும் பெற்றன. ஆனா, அவர் படம் எடுக்க ரொம்ப டைம் எடுத்துக்குவார். அந்த ரெண்டு படங்கள் முடிச்சிட்டு 'நான் சிரித்தால்' என்ற படத்தை தொடங்கியதற்குப் பிறகு சிம்புவை வைத்து நான் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' முடிச்சுட்டேன். இன்னொரு படம் நான் நடிச்சுட்டேன். அதுக்கப்புறம் 'ஆக்ஷன்' என்று ஒரு பெரிய படத்தை இயக்கி ரிலீஸ் பண்றோம். ஆனா இன்னும் அவர் முடிக்கவில்லை. எடுக்கிறார், போட்டு பாக்குறார்... இப்படியே போய்க்கிட்டு இருக்கு.

 

 

ஒரு இயக்குனரா இது நல்ல விஷயம்தான். ஆனா ஒரு தயாரிப்பாளரா எனக்கு இது பெரிய பிரச்னை. ஏற்கனவே பிஸியா இருக்குற அவரை நாம கூப்பிடக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனால், நேரா வந்து 'அதெல்லாம் முடியாது, நான்தான் பண்ணுவேன்'னு சொல்லி என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் அவர் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். இந்தப் படத்தை நான் கொடுக்கல, அவர் பிடுங்கிக்கொண்டார் என்றுதான் சொல்லணும். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி" என்று கலகலப்பாகக் கூறினார். ஆனாலும் அவர் பேச்சில் ஒரு தயாரிப்பாளரின் கவலை தெரிந்தது'' என்றார்.

 

IIT