style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.இசட் துரை இயக்கும் ஹாரர் படம் 'இருட்டு'. இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியது. நாயகியாக தன்ஷிகா நடிக்கும் இதில் சாக்சி பர்வீந்தர் வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இயக்குனர் வி.இசட் துரை இப்படம் குறித்து பேசியபோது.... "இது புதுமையான ஹாரர் படம். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். படத்தின் 85 % படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் ஊட்டியில் வைத்து நடைபெற்றது. இன்னும் படத்தின் சில காட்சிகள் ஹைராபாத் மற்றும் சூரத்தில் வைத்து நடைபெறவுள்ளது" என்றார்.