/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/58_40.jpg)
சதீஷ் தயாரிப்பில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாள பட இயக்குநர் டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ்.
ஜூன் 23 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிஸியாகவுள்ளது. அந்த வகையில் மலையாளத்திலும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் கேரளா, கொச்சியில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது சுனைனா பேசுகையில், "நான் இப்போது என் சிறு வயது சுனைனாவை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் இது போன்று நடப்பது கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" எனப் பேசிக்கொண்டிருக்கையில் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கிவிட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து அவரே சமாதானமாகி பேசத்தொடங்கினார். தொடர்ந்து பேசுகையில், "எனது குடும்பத்திடமிருந்தும்தமிழ் ரசிகர்களிடமிருந்தும் நிறைய அன்பு கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன். இப்படம் எனது சினிமா கரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)