Advertisment

"ப்ளீஸ்! தயவுசெய்து யாரும் அதை நம்பாதீங்க" - சுனைனா வேண்டுகோள்!

vdgsdg

‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து ‘நீர்ப்பறவை’, ‘வம்சம்’, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு பொது முடக்கத்திற்கு முன் இவரது நடிப்பில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, திரில்லர் வகையைச் சேர்ந்த ‘டிரிப்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர், ‘ராஜ ராஜ சோரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகளை மறுத்துவர், இவை அனைத்தும் வந்ததிகளே என்றும்,திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இப்பபோதைக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், தொடர்ந்து திரை வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறிய சுனைனா, தனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, தனது திரைப்படங்கள் பேச வேண்டும் என்றார். மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குநர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Advertisment

sunaina
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe