Advertisment

"எனது படங்களில் 'ரெஜினா' முக்கியமானது" - சுனைனா நம்பிக்கை 

sunaina talk about rejina movie

பிரபல மலையாள இயக்குநர்டோமின் டி. சில்வா இயக்கத்தில் நடிகை சுனைனா ‘ரெஜினா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்டைலிஷ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையேநல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை சதீஷ்நாயர் தயாரித்து இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகை சுனைனா கூறுகையில், "ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப்பாக ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்கதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதைக்கிற காட்சி படத்தை பார்க்கத்தூண்டும். டைரக்டர் டாமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார். கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. இயக்குநருடையமுந்திய ஹிட் படங்களான "பைபிள் சுவத்திலே பிராணயம்", "ஸ்டார்" போன்ற படங்களை விட "ரெஜினா" படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் "ரெஜினா" முக்கியமான படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

tamil cinema sunaina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe