sunaina shared a photo with his lover

காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனைனா, நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்த இவர் கடைசியாக ரெஜினா படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ஜூனில் வெளியானது. இதையடுத்து அக்டோபரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பகிர்ந்திருந்தார். ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இத்தொடர் கடந்த மார்ச்சில் வெளியனது. இத்தொடர் வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் தொடரின் வரவேற்பு குறித்துப் படக்குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தார்.

நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த சுனைனா, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனது படங்கள் குறித்தும் அல்லது புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு ஆணுடன் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து காதலில் கமிட்டாகியுள்ளதைக்குறிக்கும் வகையில் லாக்காகிவிட்டேன் என்ற எமோஜியையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுனைனாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதாகக்கூறி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் விரைவில் இது குறித்து தெளிவான அறிவிப்பை சுனைனா பகிருவார் என எதிர்பாக்கப்படுகிறது. இதனிடையே அவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment