Advertisment

கையில் துப்பாக்கியுடன் சுனைனா ; வைரலாகும் வெங்கட் பிரபு வெளியிட்ட போஸ்டர்

Sunaina with gun in hand; First look viral

Advertisment

சுனைனா, தமிழில் திறமைமிக்க நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டும் இல்லாமல் முக்கிய மற்றும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடைசியாக வெளியான படம் 'ட்ரிப்'. கடந்த ஆண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனை அடுத்து தற்போது 'எரியும் கண்ணாடி' மற்றும் விஷாலின் 'லத்தி' படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள 'ரெஜினா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுனைனா கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை மலையாள இயக்குநர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். சதிஷ் நாயர் இப்படத்திற்கு இசையமைத்து தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

regina movie venkat prabhu sunaina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe