Advertisment

'அப்போ எனக்கு 12 வயசு இருக்கும்....' - #metoo வில் நடிகை சுனைனா

sunaina

Advertisment

#metoo மூவ்மெண்ட் மூலம் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்து வரும் நிலையில் நடிகை சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அதில்...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"அப்போது எனக்கு 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அப்போது அதை பெருமையாக நினைப்பேன். அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10ஆம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார். ஒரு கட்டத்தில் எனக்கு இது புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை. இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று வேதனையோடு பகிர்ந்துள்ளார்.

metoo
இதையும் படியுங்கள்
Subscribe