Advertisment

"நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்" - சுனைனா

bfbf

Advertisment

நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், த்ரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் 'ட்ரிப்'.

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சாய் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோ சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் ஈ.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், வி.ஜே சித்து, வி.ஜே ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்ட நடிகை சுனைனா இப்படம் குறித்து பேசியபோது...

"இயக்குநர் டென்னிஸ் மிகவும் கடின உழைப்பாளி. இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதிசெய்து என்னை வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஒரு நாயுடன் நடிக்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால், படப்பிடிப்பில் பார்த்தால் பிட்புல் இருந்தது. அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப்போக நாங்கள் நண்பர்களாக மாறிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்‌ஷன் காட்சியில் நடித்துள்ளோம். படத்தில் உழைத்தவர்களுக்கும் பெரும் துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி" என்றார்.

Trip sunaina
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe