Advertisment

சன் பிக்சர்ஸ் கொடுத்த மெகா அப்டேட்!

sun pictures

பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது. விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தையும் இந்நிறுவனமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் செய்திகள் வலம்வந்த வண்ணம் உள்ளன. விஜய் நடிப்பில் உருவாகி வந்த மாஸ்டர் திரைப்படத்தின் பணிகளும் முழுமையாக முடிந்து, அப்படம்ரிலீசுக்கு தயாராகி வருவதால் விஜய்யின் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisment

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "மெகா அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது. அது எப்போது என்று யூகிக்க முடிகிறதா?" என ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இது விஜய்யின் அடுத்தபடம் குறித்தான அறிவிப்பாக இருக்குமா அல்லது ரஜினியின் அண்ணாத்த படம் குறித்தான அறிவிப்பாக இருக்குமா என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

Advertisment

sun pictures.
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe