/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijay_92.jpg)
பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த நவம்பர்2ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் பின்னாலிருந்து தாக்குவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர் நடிகர் மகா காந்தி எனத்தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொண்டதால்வழக்கு ஏதும் பதியப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நடிகர் மகா காந்தி சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவர் மேலாளர்ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்வழக்குத்தொடுத்திருந்தார். அதில், "பெங்களூரு விமான நிலையத்தில்விஜய் சேதுபதி தவறான வார்த்தையில் திட்டியதுடன்தன்னுடைய சாதியைக் குறிப்பிட்டு பேசியதாகவும், அவரது மேலாளர் தன்னை தாக்கியதாகவும் கூறி அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கைவிசாரித்த நீதிபதி விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகிய இருவரும் ஜனவரி 4 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)