பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணகோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Advertisment

இதனைத் தொடர்ந்து புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லை என புகார் அளித்த 10 நாட்களுக்கு பிறகு முதல்வர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினரை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். அப்போது மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தொடர்ப்பு படுத்தி பேசக்கூடாது, அவரின் செயலால் எங்கள் நிறுவனத்திற்கு வணிகரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் எங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேசுவதற்கு ஜாய் கிரிசில்டாவிற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த மனு கடந்த 17ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த போது, 15 நாட்களில் 12 கோடியே 5 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இழப்பீடு தொடர்பாக ஆதாரங்களை சமர்பிக்க மனுதாரர் தரப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இன்று வழக்கை ஒத்திவைத்திருந்தது. அதே போல் ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக இன்னொரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை மாதம்பட்டி ரங்கராஜ் தனியாக தொடுத்திருந்தார். அதில் தன் மீது ஜாய் கிரிசில்டா அவதூறு கருத்துகள் பரபரப்புவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கும் முந்தைய வழக்கோடு சேர்த்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜாய் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் தனிப்பட்ட நோக்கத்துக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என அப்படி வெளியிட்ட சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட்டது. அதுபோல ஜாய் கிரிசில்டாவின் பதிவுகளையும் நீக்க உத்தரவிட வேண்டும், என வாதிட்டனர்.

Advertisment

இதையடுத்து ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை, கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்யப்பட்டது, எப்போது ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார். மேலும் ஆர்டர் ரத்தானதற்கும் ஜாய் கிரிசில்டாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார், வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இது ஒரு புறம் இருக்க காவல் ஆணையரகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் கொடுத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, ஜாய் கிரிசில்டாவிடம் நான்கு மணிநேரத்துக்கு எதிராக சமீபத்தில் விசாரணை நடத்தியது. இதன் தொடர்சியாக தற்போது மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீலாங்கரை காவல் துறையினர், சம்மன் அனுப்பியுள்ளனர். செப்டம்பர் 26ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.