/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/33_30.jpg)
ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது, நடிகர் கார்த்தியின் 19-ஆவது படமாகும். திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு, மொத்த காட்சிகளையும் படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழு.
‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த படக்குழு, அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசரையும் இரு பாடல்களையும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை எனப் படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரவிற்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ‘சுல்தான்’ படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)