karthi

Advertisment

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான சுல்தான் திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான இப்படத்திற்கு தமிழில் கலவையான விமர்சனங்கள் கிடைக்க, தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், சுல்தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 30ஆம் தேதி சுல்தான் படத்தின் தெலுங்கு பதிப்பு ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் பதிப்பு மே 2ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.