Skip to main content

தணிக்கை செய்யப்பட்ட கார்த்தி படம்!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

nbxzb

 

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில், எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது, நடிகர் கார்த்தியின் 19வது படமாகும். திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட, கரோனா நெருக்கடி தளர்வுக்குப் பிறகு, மொத்த காட்சிகளையும் படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்தது படக்குழு. 

 

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்து, சமீபத்தில் வெளியான ட்ரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைப் படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்