உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் 1,09,400 பேர் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 73 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹேன்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிடா வில்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனாடாவின் பிரதமர் ட்ரூடோவின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி பிரபலங்களும், சாதாரன மக்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் உலக நாடுகள் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவில் ஷூட்டிங் நடத்தி வந்த கோப்ரா படக்குழு, கரோனா பாதிப்பால் நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளது. அதேபோல கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் சுல்தான் படத்தின் ஷூட்டிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், “கரோனாவால் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது, சுல்தான் படமும்தான். அமைதியாகவும், பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.