gdsgsd

Advertisment

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், ‘ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'சுல்தான்'. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கார்த்தியின் 19வது படமான இந்தப் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் சுமார் 45 நாட்கள் நடந்தது.

இதன் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், மீண்டும் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு பணிகள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தற்போது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.