karthi sultan

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், ‘ரெமோ' படஇயக்குனர்பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'சுல்தான்' படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கார்த்தியின் 19 -ஆவது படமான இந்தப் படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் சுமார் 45 நாட்கள் படமாக்கப்பட்டது. இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டது.

Advertisment

இதன்பின் ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் தெரிவித்தார். அதில், ''சுல்தான்' திரைப்படத்தின் 90% படப்பிடிப்பும், முக்கிய எடிட்டிங் பணிகளும் முடிந்துவிட்டது. கோவிட்19க்கு நடுவில் மீதம் இருக்கும் வேலைகளை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்த்து வருகிறோம். ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்புகளில் இது ஒரு மிகப்பெரிய முழுமையான பொழுதுபோக்குப் படங்களில் ஒன்றாக இருக்கும். நீங்கள் அனைவரும் ஏற்கனவே அறிந்தபடி, இப்போதைக்குப் பட வெளியீடு குறித்து எந்த திட்டமும் இல்லை!" என்றார்.

இந்நிலையில், தமிழக அரசு சினிமா பட ஷூட்டிங் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவருடனும் நடிகர் கார்த்தி மற்றும் ஹீரோயின் ராஷ்மிகா இருவரும் புகைப்படம் எடுத்துகொண்டது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

Advertisment

இந்நிலையில் இன்று இப்படத்தின் டப்பிங் ஆரம்பமாகியுள்ளதாக படக்குழு புகைப்படங்களுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் 'மாஸ்டர்' படத்துக்கு போட்டியாக திரையரங்கில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.