Advertisment

சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி; காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

sultan bajrang dal complaint against sai pallavi

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளசினிமாக்களில்நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில்ராணாவுடன்இணைந்துவிராடபருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவிநக்சலைட்டாகநடித்துள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு இறங்கியுள்ளன. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில்வைரலாகிவருகிறது.

Advertisment

அதில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர்ஃபைல்ஸ்திரைப்படத்தில் காஷ்மீர்பண்டிட்டுகள்கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர்பண்டிட்டுகள்கொல்லப்படுவதும்,கரோனாகாலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களைஜெய்ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர்பண்டிட்டுகளின்படுகொலையையும்,பசுகாவலர்களின் செயலையும்ஒப்பிட்டுப்பேசி நடிகை சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபஜ்ரங்தள உறுப்பினர் அகில் என்பவர் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Actress complaints kashmiri sai pallavi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe