Sukesh Chandrasekhar letter to Jacqueline Fernandez

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக, தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி சிறையில் உள்ளார். மேலும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

Advertisment

இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இருவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பல முறை விசாரணை நடத்தியது. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் 7 கோடி ரூபாய்க்கு மேல் குற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு கடந்த ஈஸ்டரை முன்னிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை சுகேஷ் சந்திராவின் வழக்கறிஞர் சமூக வலைத்தளங்களில் ஆனந்த் மாலிக் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில், "என் முயல் குட்டி... அடுத்த ஈஸ்டர், இதுவரை நீ வாழ்க்கையில் கொண்டாடாத அளவுக்குச் சிறப்பாக இருக்கும்.

நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும். நீ நடித்த சமீபத்திய விளம்பரத்தை பார்த்தேன் பேபி. அது நமக்கான விளம்பரம். லவ் யூ மை பேபி, காதல் மட்டுமல்ல, வெறித்தனமான லவ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.