Sujithra warned bayilvan ranganathan

Advertisment

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகஅறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில்நடித்துள்ள இவர்தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின்தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்கள் பற்றியஇவரின்பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும்புகார் கூறி வருகின்றனர். இதையடுத்து பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும்அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் தொலைக்காட்சிஒன்றில் பேசிய அவர், பாடகி சுசித்ரா குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை போனில் தொடர்பு கொண்டுகடுமையாக சாடியுள்ளார். அதில், "உங்களுடைய லேட்டஸ்ட் வீடியோ பார்த்தேன். அதில் என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் எது கேட்டாலும் பண்ணுவேன்னு சொல்லியிருக்கீங்களே? இதற்கு உங்ககிட்டே எதாவது ஆதாரம் இருக்கா?உங்க வீட்டு பெண்களை பற்றி இப்படி பேசினா சும்மா இருப்பீங்களா? பல பேர்கிட்ட பணம் வாங்கிக்கொண்டு இப்படி பேசுறீங்க. யார்கிட்ட பணம் வாங்குறீங்களோஅவங்களோட லவுட் ஸ்பீக்கராநீங்க ஆகுறீங்க. உங்களுக்கு நான் என்ன பண்ணேன். ஒரு பொண்ண இப்படி ஆபாசமாகவும், அசிங்கமாகவும் வாய் கூசாம ரொம்பஎல்லையை மீறி பேசுறீங்க" என்று கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பான ஆடியோதற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.