suja

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த ஆண்டு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்து பிரபலமான சுஜா வருணியும் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ் என்கின்ற சிவகுமாரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில்சிவகுமார் - நடிகை சுஜா வருணி திருமணம் இன்று காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.17க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் சமூகவலைத்தளங்களிலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.