Advertisment

சமூகவலைத்தள ரசிகர்களை வெளுத்த பிக்பாஸ் சுஜா 

suja varunee

கலாட்டா டாட்காம் இணைய தளத்தின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் நடிகை பிக்பாஸ் சுஜா வருணியும் கலந்துகொண்டார். இவர் விழாவின் நடுவே தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். பின்னர் அந்த புகைப்படங்களுக்கு சிலர் ஆபாச கமெண்ட்டுகளையும், அநாகரீகமாக புகைப்படங்களை பதிவு செய்தனர். இதை கண்டு கோபமடைந்த சுஜா தன்னுடைய புகைப்படத்திற்கு ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்களின் பதிவுகளை ஸ்கீரின்ஷாட்டுடன் பதிவிட்டு, கூடவே 'எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை. எல்லா ஆண்களும் கெட்டவர்கள் இல்லை' என்று கமெண்ட் செய்து அவர்களை வெளுத்து வாங்கினார். மேலும் அதில் பதிவிட்டுருந்தாவது..."இதுபோன்றவர்களுக்கு அஞ்சக் கூடாது. அவர்களை தைரியமாக வெளிக்காட்டுங்கள். நான் ஒரு நடிகை. சினிமாவிலும், பொது நிகழ்ச்சிகளிலும் எந்த மாதிரியான உடை அணியவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த ஆடை தான் உங்களுக்கு பிரச்னையா? அப்படியென்றால் சிறு குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகீறார்கள் ஏன்? நாங்கள் பிரச்னை இல்லை. நீங்கள் தான். உங்களது காம வெறி தான் பிரச்னை. இன்டர்நெட் எனும் மிகப்பெரிய உலகில் உங்களை மறைத்துக்கொள்ளலாம் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள்" என எச்சரித்து பதிவிட்டுருந்தார்.

Advertisment
sujavarunee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe