Advertisment

''வீடியோ எடுத்து அனுப்புங்கள்... மணிரத்னம் பதில் சொல்வார்..!'' - சுஹாசினி அறிவிப்பு!

கரோனா அச்சுறுத்தலால் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மணிரத்னம் தற்போது வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் முதல்முறையாக இயக்குனர் மணிரத்னம்சமூகவலைத்தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்துள்ளார்.

Advertisment

bdg

இதுகுறித்த அறிவிப்பை அவரது மனைவி நடிகை சுஹாசினி தன் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் மணிரத்னம் உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவிப்பையும் சுஹாசினி சேர்த்து வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது...

Advertisment

"நண்பர்களே, கடந்த 40 வருடங்களாக மணிரத்னத்தின் பணியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவர் உங்களைப் பார்ப்பதற்கான நேரமில்லையா இது? 25 விநாடிகளில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு, அவரிடம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி மற்றும் உங்கள் கேள்விகளை வீடியோவாக அனுப்புங்கள். அவர் அதைப் பார்த்து பதில் சொல்வார். உங்கள் வீடியோக்களை வாட்ஸப்பில் 9094677777 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

mani ratnam maniratnam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe