பேட்ட திரைப்படத்தில் திரிஷாவும், சிம்ரனும் நடித்திருந்தனர். ஆனால், அவர்கள் இணைந்து நடித்திருக்க மாட்டார்கள். தற்போது அவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சுகர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

simran trisha

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்ரனும், த்ரிஷாவும் சகோதரிகளாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார்.

Advertisment

சரவணன் ராமசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.