சூர்யா - பாலா படத்தில் இணைந்த சுதா கொங்கரா; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Sudha Kongara Work Executive Director surya and bala film

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.ஏற்கனவே இவர்கள்கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய இரு படங்களும்பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா பாலா இணையும் இப்படத்தின் மீதான ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்திஷெட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா - பாலா கூட்டணியில் உருவாகும் படத்தில் சுதா கொங்கரா தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற உள்ளதாககூறப்படுகிறது. இவர்ஏற்கனவே பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' படத்தில் உதவி இயக்குநராகபணியாற்றி இருந்தநிலையில் தற்போது மீண்டும் பாலா படத்தில் பணியாற்றவுள்ளார். மேலும் இப்படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பேசவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

actor surya director bala sudha kongara
இதையும் படியுங்கள்
Subscribe