fdasaasafafa

Advertisment

அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாக தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60%வரை முடிந்துள்ளது.

தற்போது கரோனா தொற்று காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அஜித் அடுத்ததாக இறுதிச் சுற்று, சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிகில் படத்தை பிரமாண்டமாக தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.