அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகிறது ‘வலிமை’ படம். அதிரடி சண்டை படமாகத் தயாராகும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60% சதவிதம் வரை முடிந்துள்ளது. தற்போது கரோனா தொற்று காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வலிமை படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பீதியால் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

gfdg

இந்நிலையில் அஜித் அடுத்ததாக கோகுலம் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Advertisment