Skip to main content

சுச்சி லீக்ஸ்க்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் பாடகி சுச்சித்ரா...

பிரபல திரைப்பட பாடகி சுசித்ரா,  ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார்.  திரைப்படங்கள், விழாக்கள் என்று பரபரப்பாக இருந்தார் சுசித்ரா. கடந்த 2017ம் ஆண்டில் திடீரென சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து,  ‘சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்மயி, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் திரையுலகம் அதிர்ந்தது. இதையடுத்து, தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, அதிலிருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என்று சுசித்ராவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
 

suchi


‘இது ஹேக்கர்களின் வேலை அல்ல, சுசித்ராவேதான் வெளியிட்டுள்ளார், அவருக்கு மனநிலை சரியில்லை’ என்றும் அப்போது தகவல் பரவியது.  இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில்,  இதை யாரும் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சுச்சியின் கணவர் கார்த்திக் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாகரத்து பெற்றார்.  

விவாகரத்திற்கு பின்னர் தனது குடும்பத்தினரை விட்டு விலகி, அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில்கூட அவர் காணாமல் போய்விட்டதாக, அவரது தங்கை சுஜிதா, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சுசித்ராவை தேடி வந்த போலீசார், சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சுசித்ராவை மீட்டனர்.  மீட்பின்போது,  “என்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அதனால்தான் குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனியாக வாழ்ந்தேன். இப்போது அங்கேயும் இருக்கப் பிடிக்காததால்தான் ஓட்டலில் தங்கியிருந்தேன்” என்று கூறியதாக ஒரு தகவல் வெளியானது. 

இதன்பின் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் பேசிய சுச்சித்ரா, 4.5 லட்சம் பேர் என் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோவ் செய்கிறார்கள். அதை யாரோ தவறாக பயன்படுத்தினர். நிறைய பேருக்கு இதனால் பிரச்னை என்பதுதான் எனக்கு மனவலியை ஏற்படுத்தியது. நான் மன அழுத்தத்துக்கு உள்ளானேன். அதற்கு மற்றுமொரு காரணம் என்னுடைய விவாகரத்துக்கும் கூட. எனக்கு என் கணவரிடம் இருந்து விவாகரத்தாகி ஒரு வருட காலமாகிறது. என்னுடைய விவாகரத்துக்குமான பேச்சும், வீடியோ வெளியானதும் ஒரே நேரத்தில் நடந்ததால் எனக்கு அந்தகாலகட்டம் ரொம்பவே கஷ்டமாக இருந்தது.
 

iruttu


தேவையில்லாம தனுஷ், அனிருத் எல்லாரையும் சம்பந்தப்படுத்தி, ஆனால் அப்படி வெளியான வீடியோக்கள் ஒன்றைக் கூட நான் இன்னும் பார்க்கவில்லை. அந்த வீடியோக்கள் மார்ஃபிங் செய்யப்பட்டதா என்று கூட எனக்குத் தெரியாது. யார் இதை செய்தார்கள் என்பது காலப்போக்கில் எனக்குத் தெரிய வரலாம்.

அதேநேரம், எனக்கு மிகவும் பிடித்தது சமையல் கலை. அதனால் லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன். அதை நம் மக்களுக்கும் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். யூடியூபில்  ‘சுச்சி குக்’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட இருக்கிறேன். அதற்கு காரணம் யார் சுச்சி லீக்ஸ் என்ற ஹேஷ்டேகை தவறாக பயன்படுத்தினார்களோ அவர்களின் மூக்கில் குத்துவிடுவது போல் இருக்கத்தான் சுச்சி குக் என்று பெயர் வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்