2.0 படத்தில் சப் டைட்டில் எழுதியதற்கு இன்னும் எனக்கு சம்பளம் தரவில்லை என்று பிரபல சப் டைட்டில் எழுத்தாளர் ரேக்ஸ் ட்விட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/reks-complaint-to-lyca-company.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
எந்திரன் படத்தின் இரண்டாம பாகமான 2.0 படம் பல வருட போராட்டத்திற்கு பிறகு சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது. இதன்பின் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம், 3டி, சத்தம் அனைத்தும் செமையாக இருந்தது என்று இப்படத்திற்கு ஒரு கலவையான விமர்சனமே கிடைத்தது. ரஜினி, அக்ஷய் குமார் என இரு பெரும் நடிகர்கள் நடித்திருந்த படத்தின் வசூல் ரூ.800 கோடியை தொட்டது. தற்போது சீனாவில் மிகப்பெரிய அளவில் 2.0 படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சப்டைட்டில் எழுத்தாளராக பணிபுரிந்த ரேக்ஸ், என்னுடைய முழு சம்பளத்தையும் தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “படம் வெளியாகி பத்து மாதங்கள் வரை அவர்களுக்கான நேரத்தை நான் கொடுத்தேன் அதன்பின்னும் அவர்கள் எனக்கு சேரவேண்டிய பாக்கிய தரமுன் வரவில்லை. இதனையடுத்து நானே தயாரிப்பு நிறுவனத்திற்கு போன், மெசேஜ் மற்றும் மெயிலின் மூலம் தெரிவித்துள்ளேன் ஆனால் அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “எந்திரன் படத்திலேயே பணிபுரிந்ததற்கு இன்னும் முழு சம்பளம் கொடுக்கவில்லை. அதை சரிபோகுது என்று விட்டுவிட்டேன். மீண்டும் இப்படி ஒரு செயல் நடக்கிறது” என்று தன்னுடைய ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)