Advertisment

அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்... தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமேசான்

Subsequent announcements. Amazon gave a surprise to the Tamil fans

Advertisment

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனால், திரைப்படங்களுக்கு நிகராக முக்கியத்துவம் கொடுத்து சீரிஸ்களையும் வெளியிட்டு வருகின்றன முன்னணி ஓடிடி தளங்கள். அந்தவகையில், தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களையும், சீரிஸ்களையும் வெளியிட்டுவரும் அமேசான், அடுத்ததாக தங்களது தளத்தில் வெளியிடப்பட உள்ள நான்கு புதிய சீரிஸ்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுத்தில் பிரம்மா மற்றும் அருண்சரண் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் 'சூழல்' என்ற தொடரை வெளியிட உள்ளது அமேசான். அதேபோல, இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா, திவ்யா பிள்ளை நடிப்பில் உருவாகும் ‘தி வில்லேஜ்’ என்ற சீரிஸும் வெளியிடப்பட உள்ளது. இது கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் வெப் சீரிஸ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘வதந்தி’ என்ற தொடரையும், கிஷோர், ரேஷ்மா, அசோக்செல்வன், ரிதுவர்மா நடிப்பில் 'மாடர்ன் லவ் சென்னை' என்ற தொடரையும் வெளியிடுகிறது அமேசான். இதில், 'மாடர்ன் லவ் சென்னை' தொடரை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்சய் சுந்தர் உள்ளிட்டோர் இயக்குகின்றனர்.

amazon prime bharathiraja pushkar gayathri raju murugan
இதையும் படியுங்கள்
Subscribe