Advertisment

"அடித்தட்டு மக்களின் இன்னல்கள்..." - ‘ஜெயில்’ படம் குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. ட்வீட்

su venkatesan mp tweet about jail movie

Advertisment

வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும்நிறைவடைந்த நிலையில், படத்தைத்திரைக்குக் கொண்டுவருவதில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ்நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ff5cad2b-e50e-4ea8-98ab-df583fe176f0" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_1.jpg" />

இந்நிலையில், ‘ஜெயில்’ படத்திற்குநாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எளிய மக்களின் வாழ்வியலை பொதுச்சமூகத்தின் முன் ‘அங்காடித்தெரு’ என்ற மகத்தான படைப்பாகத் தந்தவர் இயக்குநர் வசந்தபாலன். அந்த தொடர்ச்சியில் தற்போது நகரத்து அடித்தட்டு மக்களின் இன்னல்களை முன்வைத்து திரைக்கு வரவிருக்கும் வசந்தபாலனின் ‘ஜெயில்’ திரைப்படம் வெற்றிபெற எனதன்பு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

GV prakash jail su venkatesan vasantha balan
இதையும் படியுங்கள்
Subscribe