நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘வேட்டுவம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுந்தம்பாடி கிராமத்தில் இன்று (13.07.2025) வேட்டுவம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது சண்டைக் காட்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டத்தை சேர்ந்த ஸ்டன்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ் என்பவர் நடித்தார்.
அதாவது காரில் இருந்து தாவிக் குதித்த போது அவர் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மீட்பு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சக கலைஞர்கள் வந்து கொண்டு வந்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
சண்டைக் காட்சியில் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சம்பவம் குறித்து வழக்கு கீழையூர் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்குள்ள சினிமா கலைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.