Advertisment

வைரலாகும் சண்டைக் கலைஞர்களின் வீடியோ!

stunt man

கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த்திரைப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மார்ச் இறுதியில் இந்தியா முழுவதும் லாக்டவுனை அறிவித்தார் பிரதமர் மோடி. 50 நாட்களுக்கும் மேலாக பல துறைகள் முடங்கியுள்ள நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் பணிகளைத் தொடங்க அரசு அனுமதி தந்துள்ளது. ஆனாலும், திரைப்பட ஷூட்டிங் மற்றும் திரையரங்கம் திறக்க எப்போது அனுமதி வழங்குவார்கள் என்பது தெரியவில்லை.

Advertisment

இதனிடையே ஷூட்டிங் நடைபெறாமல் இருக்கும் இந்தக் கட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஃபெப்சி உதவி செய்து வருகிறது. பல திரையுலக பிரபலங்கள் ஃபெப்சிக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவி வருகின்றனர்.

Advertisment

கரோனா ஊரடங்கில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு குறும்படங்கள் படமாக்கப்படுகின்றன. அந்த வகையில் சண்டைக் கலைஞர்கள் உருவாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

வீட்டிலிருந்தபடியே, சண்டைக் காட்சி வடிவமைத்து படமாக்கியுள்ளனர். இந்தக் குறும்படத்தின் கரு படமாக்கப்பட்ட முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. பலரும் இந்த வீடியோவுக்கு, சண்டைக் கலைஞர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe