ADVERTISEMENT

பார்வைத்திறன் சவால் உள்ளவர்களுக்காக மாயோன் படக்குழு எடுத்துவரும் அசத்தல் முயற்சி 

07:04 PM Mar 30, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் புராண திரில்லர் திரைப்படம்' மாயோன்'. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் படத்திற்கான திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் இரு பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு வேகம்காட்டி வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக 'மாயோன்' திரைப்படத்தின் டீசர் வெளியானது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு 'ஆடியோ விளக்க' பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுவருகிறதாம். மாயோன் படக்குழுவின் இந்த வித்தியாசமான முயற்சி படம் வெளியாகும்போது, பார்வைத்திறன் சவால் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே புது அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT