வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாக படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படத்தை திரைக்கு கொண்டுவரும் பணியில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், ‘ஜெயில்’ படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், ‘ஜெயில்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்த அப்டேட்கள் படக்குழு தரப்பிலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@StudioGreen2 will be releasing the film #Jail worldwide#StudioGreenReleasesJail@KrikesC@kegvraja@vasantabalan1@gvprakash@realradikaa@proyuvraaj@SonyMusicSouthpic.twitter.com/VlFhnAN3uN
— Studio Green (@StudioGreen2) October 24, 2021