அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளி மாணவன் ஒருவன் தான் அஜித் படத்திற்குப் போவதற்கு தனக்கு விடுமுறை அளிக்குமாறு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.அதில் "respected sir, ultimate star ajith kumar (NKP) அவர்கள் படற்த்திற்கு (தவறாக எழுதியிருக்கிறார்) போக இருப்பதால் நாளை (08/08/2019) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி" என்று குறிப்பிட்டு தேதி மற்றும் நேரத்துடன் குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறார்.

ajith

உடல்நிலை சரியில்லை, பாட்டி இறந்துவிட்டார்கள், மாமாவுக்கு கல்யாணம் என்று எழுதி லீவு கேட்டுத்தான் மாணவர்கள் திருட்டு தனமாக லீவு கேட்பார்கள் என்ற நிலையில், இந்த கடிதம் புதுவிதமாக இருப்பதாக இணையதளங்களில் நெட்டிசன்கள் ஆச்சரிப்படுகிறார்கள்.