Skip to main content

மேடையில் நடிகையிடம் அத்துமீறிய மாணவர் - வைரலாகும் வீடியோ

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

 student Disobeys with aparna balamurali in college function

 

மலையாள மொழிப் படங்களில் நடித்து வந்த அபர்ணா பாலமுரளி, '8 தோட்டாக்கள்' படத்தில் தமிழுக்கு அறிமுகமானாலும் சூர்யாவின் 'சூரரைப்போற்று' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தமிழ் மற்றும் மலையாளத்தில் கவனிக்கப்படும் கதாநாயகியாக வலம் வருகிறார். 

 

இப்போது இவர் மலையாளத்தில் புதிதாக நடித்துள்ள படம் 'தங்கம்'. இப்படம் வருகிற 26 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

 

அந்த நிகழ்வில், அபர்ணா பாலமுரளியிடம் அநாகரீகமான முறையில் ஒரு மாணவர் நடந்து கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மேடையில் வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட படக்குழுவினர் அமர்ந்திருந்த நிலையில், அபர்ணாவை வரவேற்க ஒரு மாணவர் மேடைக்கு ஏறுகிறார். அபர்ணா கையில் பூ கொடுத்து வரவேற்ற அந்த மாணவன், உடனே அபர்ணாவுக்கு கை கொடுத்து, பின்னர் புகைப்படத்துக்கு எழுந்திருக்கச் சொல்லி அபர்ணாவின் தோளில் கை போட முயல்கிறார்.  அதை விரும்பாத அபர்ணா பாலமுரளி அவரிடம் இருந்து நழுவி மீண்டும் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.   

 

இந்த வீடியோ தொடர்பாக பலரும், ‘பொதுவெளியில் ஒருவரின் அனுமதியின்றி அவரது தோள்மீது கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள முயல்வதா...’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அந்த மாணவன் பின்னர் மேடையில் வந்து, ஒரு ரசிகனாக மட்டுமே புகைப்படம் எடுக்க வந்தேன். மற்றபடி தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை என அந்த நிகழ்ச்சியிலேயே விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெளியேறிய நடிகர் - எண்ட்ரியான நடிகை; தனுஷ் படத்தில் திடீர் மாற்றம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

d 50 update aparna balamurali joined cast

 

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 

 

இதனிடையே தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால் மற்றும் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் கமிட்டானதாக கூறப்பட்டது. இதையடுத்து விஷ்ணு விஷால், படத்தின் பெயரை குறிப்பிடாமல் மற்ற படங்களில் கமிட்டாகியுள்ளதால் ஒரு படத்தின் என்னால் கலந்து கொள்ளமுடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டது தனுஷ் 50 படம் தான் எனக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில்  ‘தனுஷ் 50’ படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு விஷால் கமிட்டான கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 


 

Next Story

ரியல் மாறனை சந்தித்த பொம்மி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

actress aparna balamurali meet captain gr gopinath

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் 68-வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 

 

இந்தியில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்த படப்பிடிப்பில் சுதா கொங்கராவுக்கு கையில் அடிபட்டதால் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், 'பொம்மி' கதாபாத்திரத்திற்காக தேசிய விருது வாங்கிய அபர்ணா பாலமுரளி, கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மத்ருபூமி இலக்கிய விழாவில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அதற்கு அபர்ணா பாலமுரளி தற்போது நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "உங்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது பெருமையான தருணம் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.