Advertisment

ஆடையில்லாமல் போட்டோஷூட் - நூதன முறையில் ரன்வீர் சிங்கிற்கு எதிர்ப்பு

struggle against Ranveer Singh's photo shoot

Advertisment

ரன்வீர் சிங், நடிப்பது மட்டுமில்லாமல் ஃபேஷன் மற்றும் மாடலிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவரது புகைப்படத்திற்கு பலரும் ஆதரவாகவும் விமர்சனம் செய்தும் கருத்து கூறி வந்தனர். இது தொடர்பாக ரன்வீர் சிங் மீது மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் ரன்வீர் சிங்கிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

இந்நிலையில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக சிலர் நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அதாவது ஒரு அட்டை பெட்டியில் ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண புகைப்படத்தை முன்புறம் ஒட்டி, அந்த பெட்டியினுள் துணிகளை சேகரித்து கண்டித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ranveer singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe