தமிழ் நாட்டில் இன்று ஐந்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் வெள்யானது. பொங்கலுக்கு பேட்ட விஸ்வாசம் படத்துடனேயே வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், சிம்புவின் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதால் படம் தள்ளிபோனது.
இன்று காலை ஐந்து மணிக்கு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரோஹினி திரையரங்கில் ரசிகர்கள் காட்சி போடப்பட்டது. அங்கு சிம்பு திடீரென வந்து, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மொத்த படக்குழுவும் அங்கு வந்து சிம்பு ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர்.