தமிழ் பிக்பாஸ்1 மூலம் பிரபலமான புதுமுகங்களில் மற்றவர்கள் அனைவரையும் ஓவர்டேக் பண்ணி ஒரு திரைப்படத்தில் நடித்து அதில் வெற்றியையும் பெற்றிருக்கிறது ஹரிஷ் கல்யாண் - ரைஸா வில்சன் ஜோடி. 'ப்யார் ப்ரேமா காதல்', யுவன் இசை தயாரிப்பில் இளைஞர்களின் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹரிஷ் கல்யாண், நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர், தம்பி போல என்றார்கள். அவரிடம் சிம்புவுடனான நட்பு, சிம்புவைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து பேசியபோது...

Advertisment

harish

" 'ப்யார் ப்ரேமா காதல்' படத்தின் டைட்டிலைக் கேட்ட போதே எனக்கு சிம்பு உருவாக்கிய 'லவ் ஆன்தம்' பாடல்தான் நினைவு வந்தது. அவரிடம் டைட்டிலை சொன்னேன். 'ஏதோ ஒரு விதத்தில் என் சம்பந்தமா உனக்கு ஏதோ நடக்குதுல?'னு சொன்னார். அவர் ஹாப்பிதான். அவர் குறித்த சர்ச்சைகளுக்கு சில நேரத்தில் 'எதுக்கு இப்படி பண்றாங்கன்னு புரியல. அவங்களுக்கு என்ன வேணும்னு தெரில' அப்படினு சொல்லுவாரு. ஆனா பெரும்பாலும் 'இது எல்லாம் நிறைய பாத்தாச்சு, இதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல, என்ன இருந்தாலும் சிலம்பரசன் மக்கள் மனசில் இருப்பான்' அப்படினு சொல்லுவாரு. படத்தின் ஆடியோ லான்ச்ல சிம்புவின் ஃபர்ஸ்ட் லவ் யாருன்னு ஒருத்தர் கேட்டபோது 'என் ரசிகன்தான்'ன்னு சொன்னார். உண்மையாகவே அவர் ரசிகர் மேல 'ரெஸ்பெக்ட்' வச்சிருக்கார். நிறைய சர்ச்சையான விஷயங்கள் நடந்தப்போ அவங்க ரசிகர்கள் அவர் கூடவே நின்னாங்க. படம் வந்தாலும் வரலன்னாலும் அவர் கூடவே ரசிகர்கள் இருக்கிறது. ஒரு வியப்பான விஷயம்தான்" என்றார்.