Advertisment

தனுஷ் வாழ்த்து பாட, STR கேக் ஊட்ட... - களைகட்டிய பர்த்டே பார்ட்டி (வீடியோ) 

பிப்ரவரி 3... நடிகர் சிலம்பரசன் (எ) சிம்பு (எ) STRன் பிறந்த நாள். சிம்பு தன் பிறந்தநாளை நேற்று இரவு தன் நண்பர்களான தனுஷ், ஜெயம் ரவி, யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பலருடன் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

str birthday

இந்த வீடியோவில் சிம்பு கேக் வெட்ட, அருகில் யுவன், தனுஷ், ஜெயம் ரவி, தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் உட்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து பாடியும் 'STR, STR' என்று உற்சாகமாக குரல் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். கேக் வெட்டிய சிம்பு யுவன், தனுஷ், ஜெயம் ரவி, மஞ்சு மனோஜ் ஆகியோருக்கு வரிசையாக கேக்கை ஊட்டினார். தனுஷ் உற்சாகமாக ஹேப்பி பர்த்டே பாடினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சிம்பு, தனுஷ் இருவரும் எதிரிகள் என்று ஒரு காலத்தில் பேசப்பட்டது. திரையில் அவர்கள் போட்டி அதிகமாக ஆக இந்தப் பேச்சு வலுவானது. 'மன்மதன்' உள்ளிட்ட படங்களில் வைக்கப்பட்ட பன்ச் வசனங்களால் அந்தப் பேச்சு இன்னும் அதிகமானது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சில பேட்டிகளிலும் மேடைகளிலும் இருவரும் தெரிவித்தனர், ஒன்றாகக் கலந்துகொள்வதும் நடந்தது. இப்போது சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனுஷ் இருந்தது இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Advertisment

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/lYn5Hj1B8zs.jpg?itok=_lwDfPkl","video_url":" Video (Responsive, autoplaying)."]}

DHANUSH jeyamravi Simbu yuvanshankarraja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe