மாநாட்டுக்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

சுரேஷ் காமாட்சி தயாரித்து, சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணாமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

bfdh

இந்நிலையில் 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து சிம்பு அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களாகவே மிஷ்கின் - சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மிஷ்கின் சொன்ன கதை சிம்புவிற்கு மிகவும் பிடித்துவிடவே உடனே அவர் சம்மதம் தெரிவிட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் மாநாடு படம் முடிந்தவுடன் அரம்பமாகும் எனவும், அதற்கு முன் மிஷ்கின் வேறு ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

maanaadu myskin mysskin Simbu
இதையும் படியுங்கள்
Subscribe