Advertisment

மஹா படத்தில் சிம்பு இந்த கேரக்டரில் தான் நடிக்கிறார் - இயக்குனர் தகவல் 

ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும் 'மஹா'படத்தில் ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஜமீல் 'மஹா' படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து பேசியபோது...

Advertisment

str

''மஹா' படத்தில் சிம்பு ஒரு சிறிய சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழுமையான உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் தான் என்றாலும், அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியமானது, கதையில் அவரது கதாப்பாத்திரம் ஃபிளாஸ்பேக் பகுதியில் 45 நிமிடங்கள் வரக்கூடிய பெரிய பாத்திரம் ஆகும். அவர் ஒரு பைலட்டாக நடித்திருக்கிறார். நிஜத்தில் கோவாவில் 30 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த பைலட்டுக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவரது கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த கதாப்பாத்திரத்தை மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி உருவாக்கியுள்ளோம். அவரது கதாப்பாத்திரம் பல ஆச்சர்யங்கள் கொண்டிருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் ஜமீல். என்னுடைய பெயரை விளம்பரப்படுத்தும் பொருட்டு இப்படி வைத்திருக்கிறேன் என தப்பாக நினைத்து விடாதீர்கள்.

முதலில் அவரது ரோலுக்கு சாஹிப் என்று தான் பெயர் வைத்திருந்தோம் ஆனால் அந்தப்பெயர் மிகவும் வழக்கமான பெயராக இருப்பதாக படக்குழு கருதியதால் இந்தப்பெயரை முடிவு செய்தோம். சிம்பு போல் ஒரு கச்சிதமான நடிகரை நான் பார்த்ததேயில்லை. தமிழ் சினிமவில் மிக முக்கிய ஆளுமையாக, மிக பிரபல நடிகராக இருந்தும், அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு டேக்கிலும் இது ஓகேவா, இன்னொரு முறை போகலாமா என எந்த ஒரு அலட்டலும் இன்றி கேட்டுக்கொண்டே இருந்தார். தான் பங்கு கொள்வதில் கச்சிதத்தை கடைப்பிடிப்பவராக இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் முதல் ஆளாக இருப்பார். எப்போது வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு நேரம் தவறாமல் முதல் ஆளாக அங்கு இருந்தார். படப்பிடிப்பில் வெகு சிரத்தையுடன் அமைதியாக இருந்தார். அவரது பங்கு எங்கள் படத்தை மேலும் பல படிகளுக்கு எடுத்து செல்லும். அவரது ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதனை உறுதி செய்து எங்களை உற்சாகமூட்டியிருக்கிறது'' என்றார்.

maha Simbu hansika
இதையும் படியுங்கள்
Subscribe